புதுச்சேரி அருகே முத்து மாரியம்மன் கோவிலில் சிவன், பார்வதி திருக்கல்யாண உற்சவம்

May 18 2022 3:48PM
எழுத்தின் அளவு: அ + அ -

புதுச்சேரி அருகே உள்ள வம்புப்பட்டு கிராமத்தில் முத்து மாரியம்மன் கோவிலில் சிவன், பார்வதி திருக்கல்யாண உற்சவம், வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் பழ வகைகளுக்கு பதிலாக விவசாயிகள் உற்பத்தி செய்த காய்கறிகள் நெற்கதிர்கள் உள்ளிட்டவை சீர்வரிசையாக கொண்டுவரப்பட்டன.

புதுச்சேரி திருக்கனுாரை அடுத்த வம்புப்பட்டு கிராமத்தில் முத்து மாரியம்மன் கோவில் செடல் உற்சவம் நேற்று முன்தினம் ஐயப்பனாரப்பன் கோயிலில் ஊரணி பொங்கலுடன் துவங்கியது. இதையொட்டி நேற்று காலை முத்து மாரியம்மன் கரகம் வீதியுலா, மதியம் சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து இரவு, கோவில் வளாகத்தில், சிவன் பார்வதி திருக்கல்யாண உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது. திருக்கல்யாண உற்சவத்தில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி, வித்தியாசமான முறையில், பழ வகைகளுக்கு பதிலாக, நேரடியாக கிடைக்கக் கூடிய தேங்காய், மாங்காய், எலுமிச்சை, கொய்யா, நெற்கதிர், நுங்கு, வாழைக்காய், நார்த்தங்காய், பப்பாளிக்காய், ஈச்சங்காய் உள்ளிட்டவை சீர்வரிசை தட்டில் வைக்கப்பட்டிருந்தன. பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00