அரியலூரில் ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை ஆலய தேர்பவனி : ஏராளமான கிறிஸ்துவர்கள் பங்கேற்பு

May 8 2022 4:58PM
எழுத்தின் அளவு: அ + அ -

அரியலூரில் வீரமாமுனிவரால் எழுப்பப்பட்ட ஏலாக்‍குறிச்சி அடைக்‍கல அன்னை ஆலய ​​தேர்பவனியில் ஆயிரக்‍கணக்‍கான கிறிஸ்துவர்கள் கலந்துகொண்டனர்.

அரியலூர் மாவட்டம் திருமானூர் அடுத்த ஏலாக்குறிச்சியில் வீரமாமுனிவரால் எழுப்பப்பட்ட அடைக்கல அன்னை ஆலயம் உள்ளது. மறைந்த மாண்புமிகு அம்மா அவர்களால் சுற்றுலா தலமாக அறிவிக்கப்பட்ட இந்த ஆலயம் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமாக விளங்குகிறது. அடைக்கல அன்னை திருத்தலத்தில் 291வது ஆண்டு பெருவிழா, கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொருநாளும் ஆலயத்தில் சிறப்பு மற்றும் கூட்டு திருப்பலிகள் நடைபெற்று வந்தன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அடைக்கல அன்னையின் அலங்கார தேர்பவனி நடைபெற்றது. அடைக்கல அன்னை பூக்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் பக்தர்களுக்கு காட்சி தந்தார். தொடர்ந்து அன்னையை வரவேற்கும் வகையில் தேவ தூதர்கள் அன்னைக்கு மாலையிட்டு வரவேற்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இங்கு கடந்த சில நாட்களுக்‍கு முன்பு ஆசியாவிலேயே மிக உயரமான 53 அடி வெண்கலத்திலான அடைக்கல அன்னை சொரூபம் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00