சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜரின் 175 ஆராதனை விழா - திருவையாறு காவிரி கரையில் கலைஞர்கள் இசை ஆராதனை

Jan 22 2022 11:18AM
எழுத்தின் அளவு: அ + அ -

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான சத்குரு தியாகராஜரின் 175-வது ஆராதனை விழாவினை முன்னிட்டு, கலைஞர்கள் இசை அஞ்சலி செலுத்தினர்.

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான சத்குரு தியாகராஜரின் ஆராதனை விழா, அவர் முக்தி அடைந்த பகுள பஞ்சமி அன்று தஞ்சை மாவட்டம் திருவையாறு காவிரிக்‍ கரையில் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்‍கம். உலகக்‍ புகழ்பெற்ற இசைக்‍ கலைஞர்கள், தியாகராஜரின் கீர்த்தனைகளைப் பாடி, இசை ஆராதனை செய்வர். அந்த வகையில், தியாகராஜரின் 175-வது ஆராதனை விழா இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆனால், வழக்‍கமாக நூற்றுக்‍கணக்‍கான கலைஞர் பங்கேற்பதற்கு மாறாக, வெறும் 100 கலைஞர்கள் மட்டுமே இதில் பங்கேற்றுள்ளனர். மேலும் 5 நாட்கள் நடைபெறும் ஆராதனை விழா இந்த ஆண்டு ஒரு நாள் மட்டுமே அனுமதிக்‍கப்பட்டுள்ளது.

இசை ஆராதனையில் பங்கேற்கும் கலைஞர்களுக்‍கு கொரோனா விதிமுறைகள் கட்டாயமாக்‍கப்பட்டுள்ளது. பொது அனுமதி மறுக்‍கப்பட்டுள்ளதால், பொதுமக்‍களும், இசைப் பிரியர்களும் ஏமாற்றத்துடன் திரும்பினர். இந்நிலையில் விழாவினை முன்னிட்டு உஞ்சவிருத்தி நடைபெற்றது. இதில் அவரது திருவுருச்சிலை கொண்டு வீதியுலா நடைபெற்றது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00