வேளாங்கண்ணி பேராலயம் 3 நாட்களுக்‍குப்பின் திறப்பு - மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து குவிந்த பக்‍தர்கள்

Sep 20 2021 2:23PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்‍கையாக வார இறுதி நாட்களில் கோயில்களில் தரிசனம் செய்ய பக்‍தர்களுக்‍கு அனுமதி மறுக்‍கப்பட்டுள்ள நிலையில், நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேராலயம், 3 நாட்களுக்‍குப்பின் இன்று திறக்‍கப்பட்டதால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் பக்‍தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர்.

கொரோனா விதிமுறைகள் காரணமாக, வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்‍கிழமைகளில் பிரசித்திபெற்ற ஆலயங்களில் பக்‍தர்கள் அனுமதிக்‍கப்படுவதில்லை. வேளாங்கண்ணி பேராலயத்தில் ஆண்டுத்திருவிழாவில் முக்‍கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியாததால், ஏராளமான பக்‍தர்கள் தற்போது குவிந்து வருகின்றனர். தங்களது நேர்த்திக்‍கடன் செலுத்தும் விதமாக, மாதாவுக்‍கு மாலை அணிவித்தும், மெழுகுவர்த்தி ஏற்றியும், முடி காணிக்‍கை செலுத்தி வருகின்றனர். மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்படி, சமூக இடைவெளியை பின்பற்றியும், முகக்‍கவசம் அணிந்தும் வழிபாடு நடத்தினர்.

வேளாங்கண்ணி கடல் தொடர்ந்து சீற்றத்துடன் காணப்படுவதால், கடலில் குளிக்‍க வேண்டாம் என அறிவிப்பு பலகை வைக்‍கப்பட்டுள்ளது. எனினும், ஆபத்தை உணராமல் கடலில் குளித்து வருவதால், இதுகுறித்து நடவடிக்‍கை எடுக்‍க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்‍கை விடுத்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00