ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் அன்னதான திட்டம் மீண்டும் தொடக்கம் : பக்தர்கள், பொதுமக்கள் மகிழ்ச்சி

Sep 20 2021 1:32PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் 18 மாதங்களுக்கு பிறகு அன்னதான சேவை தொடங்கப்பட்டதால், பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ரங்கநாதர் கோவிலில் கடந்த 2012-ம் ஆண்டு மறைந்த மாண்புமிகு அம்மா அவர்களால் பக்தர்களுக்கு நாள்தோறும் அன்னதானம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. 18 ஆண்டுகளாக வெற்றிக்கரமாக செயல்பட்டு வந்த அன்னதான திட்டம், கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. சுமார் 18 மாதங்களுக்கு பிறகு பக்தர்களுக்கான அன்னதான சேவை மீண்டும் தொடங்கப்பட்டது. ஸ்ரீரங்கம் கோவிலின் இணை ஆணையர் திருமதி.கல்யாணி, இத்திட்டத்தினை இன்று தொடங்கி வைத்தார். அன்னதான சேவை தொடங்கப்பட்ட நிலையில், பக்தர்களுக்கு வாழை இலையில் உணவுகள் பறிமாறப்பட்டன. அரசின் உத்தரவின்படி வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் வழிபாட்டுக்கு அனுமதி இல்லை என்பதால், அன்றைய நாட்களில் மட்டும் பக்தர்களுக்கு பார்சல் மூலம் அன்னதானம் வழங்கப்படுமென கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00