ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையையொட்டி, தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் இன்று சிறப்பு வழிபாடு - பக்‍தர்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம்

Jul 23 2021 1:09PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி, தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில், திரளான பக்‍தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படும் ஆடிமாதத்தில், ஆலயங்களில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. இன்று ஆடிமாதம் முதலாவது வெள்ளிக்கிழமை மற்றும் பௌர்ணமி ஒருசேர அமையப்பெற்ற நாள் என்பதால், இன்று அதிகாலை முதல் அம்மன் ஆலயங்களுக்கு பொதுமக்கள் சென்று வழிபட்டு வருகின்றனர் அதன் ஒரு பகுதியாக, சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பொதுமக்கள் காலை முதலே சிறப்புப் பூஜைகளில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

ஆடி மாதம் முதல் வெள்ளியை முன்னிட்டு, சென்னை பிராட்வேயில் அமைந்துள்ள புகழ்பெற்ற காளிகாம்பாள் - கமடேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தூத்துக்குடி தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் சிவன் கோவில் உள்ள பாகம்பிரியாள் சன்னதி மற்றும் நகரில் உள்ள 21 அம்மன் ஆலயங்களில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. இதில் பெண் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00