புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவில் கந்தூரி விழா - சந்தனம் பூசும் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்பு

Jul 14 2021 12:48PM
எழுத்தின் அளவு: அ + அ -

புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவில் கந்தூரி விழாவையொட்டி நடைபெற்ற சந்தனம் பூசும் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.

நாகையை அடுத்த நாகூரில் பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்கா அமைந்துள்ளது. இங்கு சின்ன ஆண்டவர் என்று அழைக்கப்படும் செய்யது முகமது யூசுப் சாஹிப் தாதா சமாதி உள்ளது. ஆண்டுதோறும் சின்ன ஆண்டவர் கந்தூரி விழா ஜூலையில் நடைபெறுவது வழக்கம். கடந்த ஆண்டு விழா கொரோனா ஊரடங்கு காரணமாக மிக எளிமையான முறையில் நடைபெற்ற இவ்விழா, தற்போது ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டு உள்ளதால் நேற்று முன்தினம் கோலாகலமாக தொடங்கியது. தர்கா அலங்காரவாசல் முன்பு அமைக்கப்பட்ட தொட்டிலில் இஸ்லாமியர்கள் தங்களது வேண்டுதல் தொடர்பாக பொருட்களை கட்டி வழிபட்டனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சின்ன ஆண்டவர் சமாதிக்கு சந்தன பூசும் நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. இதில் முககவசம் அணிந்தும், சமூக இடைவெளி பின்பற்றி கலந்து கொண்ட அனைவருக்கும் சந்தனம் மற்றும் வெற்றிலை, பூக்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00