திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று ராமநவமி விழா

Apr 21 2021 10:25AM
எழுத்தின் அளவு: அ + அ -

திருப்பதி ஏழுமலையான் கோவிலில், இன்று ராமநவமி விழா நடைபெறுகிறது. ராமர் பட்டாபிஷேக விழா, நாளை நடைபெறுகிறது.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில், ராமநவமி விழா இன்று நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனையொட்டி, காலை 9 மணியில் இருந்து பகல் 11 மணிவரை, உற்சவர்களான சீதா, ராமர், லட்சுமணர், ஆஞ்சநேயருக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், தேன், இளநீர் ஆகிய சுகந்த திரவியங்களால் ஸ்நாபன திருமஞ்சனம் செய்யப்படுகிறது.

அதனைத்தொடர்ந்து, இரவு 7 மணியில் இருந்து 9 மணி வரை அனுமன் வாகனத்தில் உற்சவர் மலையப்பசாமி எழுந்தருளி, கோவில் வளாகத்தில் உலா வந்து அருள்பாலிக்கிறார். இரவு 10 மணியில் இருந்து 11 மணி வரை, பங்காருவாகிலியில் ஆஸ்தானம், நாளை ராமர் பட்டாபிஷேக விழா நடைபெற உள்ளதாக அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, கொரோனா தொற்று காரணமாக பல மாநிலங்களில் பகுதி நேர ஊரடங்கு அமலில் உள்ளதால், தரிசனத்திற்கு வர முடியாமல் பக்தர்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, ஏப்ரல் 21 முதல் 30-ம் தேதி வரை தரிசன டிக்கெட் முன்பதிவு செய்த பக்தர்கள், கொரோனா தொற்று காரணமாக வரமுடியாத சூழ்நிலை ஏற்படும் நிலையில், அவர்கள் 90 நாட்களுக்குள் வந்து, ஏழுமலையானை தரிசனம் செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00