கொரோனா வைரஸ் பரவல் எதிரொலி : திருப்பதியில் ஆன்லைன் முன்பதிவு டிக்கெட்டுகளின் எண்ணிக்கை பாதியாக குறைப்பு

Apr 20 2021 8:25AM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா வைரஸ் பரவல் எதிரொலியாக, திருப்பதியில், 300 ரூபாய் கட்டணத்தில் ஆன்லைன் முன்பதிவு டிக்கெட்டுகளின் எண்ணிக்கையும் பாதியாக குறைக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றால், கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை, ஏழுமலையானின் தரிசனம் ரத்து செய்யப்பட்டது. அதன்பிறகு ஜூன் மாதம் முதல், பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி, பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தற்போது கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. எனவே கடந்த 12-ம் தேதி முதல், திருப்பதியில் அளிக்கப்பட்டு வந்த இலவச தரிசன டோக்கன்களை, தேவஸ்தானம் ரத்து செய்தது. இதனையடுத்து, தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை பாதியாக குறைந்தது.

இந்நிலையில், 300 ரூபாய் கட்டணத்தில் ஆன்லைன் முன்பதிவு டிக்கெட் எண்ணிக்கையையும் பாதியாக தேவஸ்தானம் குறைத்துள்ளது. தினசரி 30 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்து வந்த நிலையில், தற்போது அது பாதியாக குறைக்கப்பட்டு, 15 ஆயிரம் பக்தர்களே முன்பதிவு செய்து தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர். இந்த நடைமுறை, வரும் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00