மதுரை சித்திரைத் திருவிழா வரும் 15-ம் தேதி கொடியேற்றம் : திருக்‍கல்யாணம், சட்டத்தேர், சுவாமி தரிசனத்திற்கு அனுமதியில்லை - ஏப். 24 மீனாட்சி திருக்‍கல்யாண நிகழ்வுக்‍குப்பின் பக்‍தர்களுக்‍கு அனுமதி

Apr 13 2021 5:14PM
எழுத்தின் அளவு: அ + அ -

மதுரை சித்திரை விழாவின் முக்‍கிய அம்சமான மீனாட்சியம்மன் திருக்‍கல்யாண வைபவத்தன்று, திருமண நிகழ்வுக்‍குப்பின் பக்‍தர்கள் தரிசனம் செய்ய கோயில் நிர்வாகம் அனுமதியளித்துள்ளது.

உலகப்பிரசித்திபெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா வரும் 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்‍கையாக, திருக்‍கல்யாணம், சட்டத்தேர் மற்றும் சுவாமி தரிசனத்திற்கு பக்‍தர்கள் அனுமதிக்‍கப்பட மாட்டார்கள் என தெரிவிக்‍கப்பட்டுள்ளது. சித்திரைத் திருவிழா, வரும் 26ம் தேதி வரை கோயில் வளாகத்திற்குள்ளேயே நடைபெறும் என்றும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது. வரும் 24ம் தேதி, மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்‍கல்யாண வைபவம் நடைபெறும் நாளில், திருமண நிகழ்வுக்‍குப்பின்னர், மணக்‍கோலத்தில் தரிசனம் செய்ய பக்‍தர்களுக்‍கு அனுமதி அளிக்‍கப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00