வட இந்தியாவில் தொடங்கியது சைத்ரா நவராத்திரி திருவிழா : துர்கை கோவில்களில் சிறப்பு பூஜைகள்

Apr 13 2021 11:40AM
எழுத்தின் அளவு: அ + அ -

வட இந்தியாவில் சைத்ரா மாதப்பிறப்பையொட்டி, 9 நாட்களுக்கு கொண்டாடப்படும் நவராத்திரி திருவிழா களைகட்ட தொடங்கியுள்ளது.

இந்தியாவில் வட மாநிலங்களில் சந்திர நாட்காட்டியின் படி ஏப்ரல் மாதத்தில் சைத்ரா நவராத்திரி திருவிழா கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் சைத்ரா மாதம் இன்று பிறந்துள்ளதையொட்டி, நவராத்திரி கொண்டாட்டம் தொடங்கியுள்ளது. இன்று தொடங்கிய விழா வரும் 21-ம் தேதி ராம நவமியுடன் நிறைவு பெறுகிறது. இந்நிலையில், சைத்ரா நவராத்திரியின் முதல் நாளான இன்று டெல்லி, மும்பை, அயோத்தி, வாரணாசி உள்ளிட்ட வட மாநில நகரங்களில் உள்ள துர்கை கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில், கொரோனா தடுப்பு நடவடிக்‍கையாக பொதுமக்‍கள் பங்கேற்க அனுமதி வழங்கப்படவில்லை. ஜம்மு காஷ்மீர் வைஷ்ணவி தேவி கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் கொரோனா தடுப்பு விதிமுறைகளுடன் பக்‍தர்கள் அனுமதிக்‍கப்பட்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00