திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் - கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு

Apr 11 2021 2:24PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்ற நிகழ்ச்சியில், கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

கொரோனா ஊரடங்கு காரணமாக சமயபுரம் மாரியம்மன் கோயிலில் கடந்த ஆண்டு சித்திரை தேர் திருவிழா நடைபெறவில்லை. கொரோனா 2-ம் அலை பரவல் காரணமாக நேற்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு கட்டுப்பாடுகளுடன் தேர் திருவிழாவை நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியது. அதன்படி, இன்று காலை, கொடியேற்றத்துடன் சித்திரை தேர் திருவிழா தொடங்கியது. இதில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை. கொடியேற்றத்திற்கு பிறகு காலை 8.30 மணி முதல் அம்மனை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இன்றிரவு வசந்த மண்டபத்தில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். அதைத்தொடர்ந்து, கேடயத்தில் புறப்படும் அம்மன், கோயிலின் இரண்டாம் பிரகாரத்தை வலம் வந்து அபிஷேக மண்டபம் சென்றடைவார். இதேபோல் ஒவ்வொரு நாளும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி அம்மன் அருள் பாலிக்க உள்ளார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம், வரும் 20-ம் தேதி நடைபெற உள்ளது. இதில், பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00