உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவின் 464-வது கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடக்கம் - தமிழகம் மட்டுமின்றி, வெளிமாநில பக்தர்களும் பங்கேற்பு

Jan 15 2021 12:06PM
எழுத்தின் அளவு: அ + அ -

உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவின் 464 வது கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

நாகை மாவட்டத்தில் உள்ள நாகூர் தர்காவின் கந்தூரி விழா வருடா வருடம் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். 464 வது கந்தூரி விழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. நாகை மீரா பள்ளியில் இருந்து வழக்கமாக 50க்கும் மேற்பட்ட கப்பல் போன்ற ஊர்வலங்கள் வரும் நிலையில் இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக மந்திரி கப்பல், செட்டி பல்லக்கு, சின்ன ரதம் உள்ளிட்ட 8 மின்னொளியால் அலங்கரிக்கப்பட்ட கப்பல்களில் மட்டுமே கொடி ஊர்வலம் நடைபெற்றது. முக்கிய வீதிகளில் வலம் வந்த கொடி ஊர்வலம், இரவு நாகூர் அலங்கார வாசல் வந்தடைந்தது. பின்னர் புனித கொடிகள் பாத்திஹா ஒதப்பட்டு தர்காவின் 5 மினராக்களிலும் ஏற்றப்பட்டு கந்தூரி விழா தொடங்கியது. கந்தூரி விழாவில் பங்கேற்க தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். முக்கிய நிகழ்ச்சியான பெரிய ஆண்டவருக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சி வருகின்ற 25 ஆம் தேதி அதிகாலை நடைபெற உள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00