நாமக்கல்லில் ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு : ஒரு லட்சத்து எட்டு வடை மாலைகள் சார்த்தப்பட்டு, பூஜைகள்

Jan 12 2021 10:38AM
எழுத்தின் அளவு: அ + அ -

நாமக்கல் அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோவிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு, இன்று சுவாமிக்கு ஒரு லட்சத்து எட்டு வடை மாலைகள் சார்த்தப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன.

மார்கழி மாதத்தில் அமாவாசை திதியும் மூல நட்சத்திரமும் கொண்ட நன்னாளில் ஆஞ்சநேயர் அவதரித்தார். அதன்படி , நாமக்கல்லில் உள்ள, பிரசித்தி பெற்ற அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோவிலில், ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதிகாலையில் 4 மணிக்கு கோவிலின் நடை திறக்கப்பட்டு காலை 5 மணிக்கு ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து எட்டு வடைகள் கொண்ட மாலைகள் சார்த்தப்பட்டன. சிறப்பு பூஜைகள் நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஆஞ்சநேயரை தரிசிக்க இணைய வழியில் பதிவு செய்த 750 பேர், இலவச தரிசன முறையில் 750 பேர் என ஒரு மணி நேரத்திற்கு 1500 பேர் அனுமதிக்கப் படுகின்றனர். இவ்விழாவுக்கு வரும் பக்தர்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்யும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00