கொரோனா தளர்வுக்‍குப் பிறகு வேளாங்கண்ணி பேராலயத்தில் குவிந்த வெளிமாநில பக்தர்கள் - கடலில் குளிக்க அனுமதிக்கப்படாததால் ஏமாற்றம்

Sep 27 2020 12:49PM
எழுத்தின் அளவு: அ + அ -

நாகை மாவட்டத்தில் அமைந்துள்ள வேளாங்கண்ணி பேராலயத்தில், வெளிமாநில மற்றும் வெளிமாவட்ட பக்தர்கள் ஏராளமாகக் குவிந்தனர். அவர்கள், கடலில் குளிக்க அனுமதிக்கப்படாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

கொரோனா ஊரடங்குக் கட்டுப்பாடுகளை தமிழக அரசு தளர்த்தியதைத் தொடர்ந்து, வேளாங்கண்ணியில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில், பக்தர்களுக்கு கடந்த 9-ம் தேதிமுதல் வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில், ஞாயிற்றுக் கிழமையான இன்று, வெளிமாநில மற்றும் வெளிமாவட்ட பக்தர்கள், கார் மற்றும் பேருந்துகளில் வேளாங்கண்ணிக்கு வருகை தந்தனர். பேராலயம் சார்பில், கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, உடல் வெப்பப் பரிசோதனை செய்த பின்னர், முகக் கவசம் அணிந்தவர்கள் மட்டுமே சமூக இடைவெளியைப் பின்பற்றி அனுமதிக்கப்பட்டனர். விடுதிகள் அனைத்தும் திறக்கப்பட்டிருப்பதால், வெளியூர் பக்தர்கள் அங்கியே தங்கி வேளாங்கண்ணி கடைத்தெரு, கடற்கரை உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று வந்தனர். ஆனால், கடலில் குளிக்க அனுமதிக்கப்படாததால், பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். வேளாங்கண்ணி கடலோர காவல் குழும போலீசார், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00