கொரோனா ஊரடங்கால் மும்பையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் ரத்து செய்யப்படும் - விழா குழுவினர் அறிவிப்பு

Jul 1 2020 4:59PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக, மும்பையில், இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் ரத்து செய்யப்படுவதாக விழா கமிட்டி அறிவித்துள்ளது.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்‍கையாக, நாடு முழுவதும் கடந்த மார்ச் 24-ம் தேதி அமல்படுத்தப்பட்ட தேசிய ஊரடங்கு, 6-ம் கட்டமாக, வரும் 31-ம் தேதிவரை நீட்டிக்‍கப்பட்டுள்ளது. ஆனால், கொரோனா பரவல் குறைவாக உள்ள பகுதிகளில், பெரும்பான்மையான பணிகளுக்‍கு தளர்வுகள் அளிக்‍கப்பட்டு, கோவில் வழிபாடு போன்றவற்றுக்‍கு அனுமதி அளிக்‍கப்பட்டுள்ளது. அதேநேரம், கொரோனா பரவல் அதிகம் உள்ள இடங்களில், கடுமையான கட்டுப்பாடுகளுடன், முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அந்த வகையில், மஹாராஷ்ட்ரா தலைநகர் மும்பையில், அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை தவிர மற்ற அனைத்து பணிகளும் முடக்‍கப்பட்டுள்ளன. இந்நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக, மும்பையில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் ரத்து செய்யப்படுவதாக விழா கமிட்டி அறிவித்துள்ளது. இதற்காக திரட்டப்படும் தொகையை முதல்வர் நிவாரண நிதிக்கு அளிக்க முடிவு செய்துள்ளதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00