திருப்பதி தேவஸ்தான சொத்துகளை விற்பனை செய்வது இல்லை என அறங்காவலர் குழுக்‍கூட்டத்தில் முடிவு - பக்‍தர்கள் அளிக்‍கும் சொத்துகள் உள்ளிட்ட விவரங்களை கண்காணிக்‍க தனிக்‍குழு அமைக்‍கப்படும் என்றும் தகவல்

May 28 2020 6:05PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருப்பதி தேவஸ்தான சொத்துகளை விற்பனை செய்வது இல்லை என இன்று நடைபெற்ற அறங்காவலர் குழுக்‍கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான இடங்கள் ஏலம் விடப்படும் என ​திருமலை திருப்பதி தேவஸ்தானம் கடந்த வாரம் தெரிவித்திருந்தது. தமிழகத்தில், காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில் திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமாக உள்ள குடியிருப்பு இடங்கள் மற்றும் விவசாய நிலங்கள் பொது ஏலத்தில் விடப்படும் என்றும், பராமரிக்க முடியாத 23 இடங்களை ஏலம் விடுவதாகவும் திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், தேவஸ்தான சொத்துகள் விற்பனை தொடர்பாக திருப்பதி அறங்காவலர் குழு ஆலோசனைக்‍கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், திருப்பதி தேவஸ்தான சொத்துகளை விற்பனை செய்வது இல்லை என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தேவஸ்தானத்திற்கு பக்‍தர்கள் அளிக்‍கும் சொத்துகள் உள்ளிட்ட விவரங்களை கண்காணிக்‍க தனிக்‍குழு அமைக்‍கப்படும் - வருங்காலங்களில் பக்‍தர்கள் அளிக்‍கும் சொத்துகளையும் தனிக்‍குழு பராமரிக்‍கும் என்றும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது. ஊரடங்கிற்குப் பின்னர் திருப்பதி ஆலய தரிசனத்திற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், நாளொன்றுக்‍கு சுமார் 7 ஆயிரம் பேர் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00