திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு விற்பனை அமோகம் : முதல்நாளில் 2.4 லட்சம் லட்டுகள் விற்பனை

May 26 2020 3:01PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு விற்பனை தொடங்கிய முதல்நாளில், மொத்தம் 2.4 லட்சம் லட்டுகள் விற்பனையாகியுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக திருப்பதி கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. எனவே பக்தர்களின் கோரிக்கையை அடுத்து 50 ரூபாய் மதிப்புள்ள ஒரு பிரசாத லட்டின் விலையை, பாதியாக குறைத்து 25 ரூபாய்க்கு விற்பனை செய்ய தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி, 12 மாவட்ட தலைநகரங்களில் லட்டு பிரசாத விற்பனையை தேவஸ்தானம் தொடங்கியது. குண்டூருக்கான லட்டு விற்பனை பங்கு விஜயவாடாவுக்கு மாற்றப்பட்டது. கொரோனா ஊரடங்கு கட்டுப்பாட்டு விதிமுறைகளுடன் ஆந்திர மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட மையங்கள், தேவஸ்தான கல்யாண மண்டபங்களில் லட்டு பிரசாத விற்பனை நடைபெற்றது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பிரசாதத்தை வாங்கிச் சென்றனர். விற்பனை துவங்கிய சில மணி நேரங்களிலே அனைத்து லட்டுகளும் விற்று தீர்ந்தன என்று கூறப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00