ஊரடங்கு - கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழா ரத்து : கொரோனா பரவாமல் தடுக்க மக்கள் முடிவு

Apr 7 2020 2:58PM
எழுத்தின் அளவு: அ + அ -

கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் புகழ்பெற்ற கூத்தாண்டவர் கோயில் திருவிழா, ஊரடங்கு எதிரொலியாக இம்முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கூவாகம் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோயிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் திருவிழா நடைபெறும். 14 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில், தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், அமெரிக்கா, லண்டன், மலேசியா, தாய்லாந்து போன்ற வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான திருநங்கைகள் கலந்து கொள்வார்கள்.

அதன்படி, கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழா, வரும் 21-ம் தேதி தொடங்க இருந்தது. ஆனால், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், இத்திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவாமல் தடுப்பதற்காக, திருவிழா நடத்தும் 14 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஒன்றுகூடி இந்த முடிவை எடுத்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00