சபரிமலையில் இன்று மகர ஜோதி தரிசனம் : லட்சக்‍கணக்‍கான பக்‍தர்கள் குவிந்து வருவதால் பலத்த பாதுகாப்பு - தேசிய பேரிடர் மீட்புப் படை, அதிரடிப்படை வீரர்கள் குவிப்பு

Jan 15 2020 11:34AM
எழுத்தின் அளவு: அ + அ -

சபரிமலை அய்யப்பன் கோவிலில், இன்று மாலை மகர விளக்கு விழாவையும், பொன்னம்பல மேட்டில் மகர ஜோதி தரிசனத்தையும் காண ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

பிரசித்திப்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில், இன்று மகர விளக்கு பெருவிழா நடைபெறுகிறது. இதையொட்டி, பந்தளம் அரண்மனையில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட திருவாபரணங்கள், சரம்குத்தியில், தேவசம் போர்டு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும். சுவாமி அய்யப்பனுக்கு, இந்த திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு, மாலையில், மகர விளக்கு பூஜை நடைபெற உள்ளது. இதைக் காண, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து, ஏராளமானபக்தர்கள் சபரிமலையில் குவிந்துள்ளனர். மாலை, 6:00 மணிக்கு பொன்னம்பல மேட்டில், மகர ஜோதி ஏற்றப்படும். மகர ஜோதி தரிசனத்தை காண வரும் பக்தர்களின் பாதுகாப்புக்கு, உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. சபரிமலை அய்யப்பன் கோவிலில், பக்தர்கள் தரிசனத்திற்காக, 19-ம் தேதி வரை நடை திறந்திருக்கும்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00