மக்களின் முதல்வர் ஜெயலலிதா விரைவில் வெளிவர வேண்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கோயில்களில் சிறப்பு பிரார்த்தனைகள் - அங்கபிரதட்சணம் உள்ளிட்ட பல்வேறு வழிபாடுகள்

Oct 1 2014 4:11PM
எழுத்தின் அளவு: அ + அ -

மக்களின் முதல்வர் செல்வி. ஜெயலலிதா, பொய் வழக்கில் இருந்து மீண்டுவர வேண்டி, தமிழகம் முழுவதும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. திருக்கோயில்கள், மசூதிகள் மற்றும் தேவாலயங்களில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனைகளில் லட்சக்கணக்கானோர் பங்கேற்று, மக்களின் முதல்வர் செல்வி. ஜெயலலிதாவுக்கு விரைவில் நீதி கிடைக்க வேண்டும் என மனமுருக பிரார்த்தனை செய்தனர்.

மக்களின் முதல்வர் செல்வி ஜெயலலிதா, பொய்வழக்கிலிருந்து விரைவில் விடுபட வேண்டும் என பிரார்த்தனை மேற்கொண்டு, சென்னை திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயிலில், விஷ்வசாந்தி ஹோமம், மகாசாந்தி ஹோமம், பிரதான சாந்தி ஹோமம் ஆகியவை, சென்னை 89-வது வட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில் நடைபெற்றது. கழக அவைத்தலைவர் திரு. இ. மதுசூதனன் உட்பட ஏராளமான கழகத் நிர்வாகிகளும், தொண்டர்களும் இதில் கலந்து கொண்டனர். இந்த வழிபாட்டு நிகழ்ச்சியின்போது, 108 சுமங்கலி பெண்களுக்கு வஸ்திர தானம் வழங்கப்பட்டது.

சென்னை, வடபழனி அருள்மிகு முருகன் திருக்கோவிலில், சிறப்பு பிரார்த்தனைகள் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. ஆயிரக்கணக்கான அ.இ.அ.தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

சென்னை பெரம்பூரில் உள்ள பிரசித்தி பெற்ற கங்கையம்மன் கோவிலில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், அக்கினிச்சட்டி ஏந்தி ஊர்வலமாக சென்று சிறப்பு வழிபாடு நடத்தினர்.

திருச்சி மாநகர் மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவை சார்பில், மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோவிலில் சிறப்பு அபிஷேகமும், பிரார்த்தனையும் நடைபெற்றது.

திருச்சி மாநகர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க. மகளிர் அணியினர், உறையூர் வெக்காளியம்மன் கோவிலில், சிறப்பு பிரார்த்தனை நடத்தியதோடு, மாலை அணிந்து விரதம் மேற்கொண்டனர்.

பொள்ளாச்சி பாலக்காடு சாலையில் உள்ள லட்சுமி நரசிம்மர் திருக்கோவிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் யாகங்களும் நடைபெற்றன.

புதுக்கோட்டை மாவட்ட அ.இ.அ.தி.மு.க.வினர், இலுப்பூரில் உள்ள பிடாரி அம்மன் கோயிலில் அங்க பிரதட்சணம் செய்து பிரார்த்தனை மேற்கொண்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ஜெ. ஜெயலலிதா பேரவை சார்பில், மக்களின் முதல்வர் செல்வி ஜெயலலிதாவுக்கு நீதிகிடைக்க வேண்டி சிவன் கோவிலில் கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது.

திண்டிவனம் அருள்மிகு திந்தினீஸ்வரர் திருக்கோயிலில், விழுப்புரம் வடக்கு மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவை சார்பில், ஆயிரத்து எட்டு குத்துவிளக்கேற்றி வழிபாடு நடைபெற்றது.

கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரம் ஸ்ரீதேவபுரீஸ்வரர் துர்கையம்மன் ஆலயத்தில், ஏராளமான அ.இ.அ.தி.மு.க. தொண்டர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

கரூர்-சேலம் பைபாஸ் சாலையில் உள்ள ஸ்ரீ மகாமாரியம்மன் திருக்கோயிலில் ஏராளமான அ.இ.அ.தி.மு.க.வினர் சிறப்பு பூஜை மற்றும் பிரார்த்தனை செய்தனர்.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை முருகன் கோயிலில், திரளான அ.இ.அ.தி.மு.க.வினரும், பொதுமக்களும் தேர் இழுத்து வழிபாடு மேற்கொண்டனர்.

மக்களின் முதல்வர் செல்வி ஜெயலலிதா அனைத்துத் தடைகளையும் உடைத்தெறிந்து மீண்டும் தமிழக முதலமைச்சராக வேண்டி, தமிழ்நாடு அனைத்து அர்ச்சகர்கள் சங்கம் சார்பில், திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் சிவாச்சாரியார்கள் சிறப்புப் பிரார்த்தனை செய்தனர்.

அ.இ.அ.தி.மு.க. வைச் சேர்ந்த 300 பேர் ஊர்வலமாகச் சென்று, அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோயிலில் சிறப்பு கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். மேலும், அங்கபிரதட்சனம் செய்தும் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோயிலில், நெல்லை புறநகர் மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவை சார்பில், வழிபாடு நடைபெற்றது.

மக்களின் முதல்வர் செல்வி ஜெயலலிதா விரைவில் விடுவிக்கப்பட வேண்டி, திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பகுதியில் பழைமைவாய்ந்த, மகான் செய்யது உசேன் ஒலியுல்லா தர்ஹாவில், கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த சிறுவாபுரி அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் அ.இ.அ.தி.மு.க.வினர் சிறப்பு அபிஷேகம் மற்றும் பிரார்த்தனையில் கலந்துகொண்டனர்.

மேலும், அதியமான்கோட்டையில் உள்ள புகழ்பெற்ற காலபைரவர் ஆலயத்தில் சிறப்பு யாகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.

மக்களின் முதல்வர் செல்வி ஜெயலலிதாவுக்கு நீதி கிடைக்க வேண்டியும், பொய் வழக்கிலிருந்து விரைவில் மீண்டுவர வேண்டியும், நாகை மாவட்டம் சிக்கல் சிங்காரவேலர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில், திரளானோர் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்தனர்.

நாகை மாவட்டம் நாகூர் தர்காவில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஏராளமானோர் கலந்துகொண்டு, மக்களின் முதல்வருக்கு நீதிகிடைக்க வேண்டி வழிபாடு நடத்தினர்.

சென்னை அண்ணா சாலையில் உள்ள தர்காவில் தமிழ்மாநில முஸ்லீம் லீக் சார்பில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

இதேபோன்று, மதுரை கோரிபாளையத்தில் உள்ள பள்ளி வாசலில் சர்வசமய கூட்டுப்பிரார்த்தனை நடைபெற்றது. இதில், அனைத்து மதத்தினரும் பங்கேற்று வழிபாட்டில் ஈடுபட்டனர்.

நாமக்கல் மாவட்டம், நாமக்கல் ஆஞ்சநேயர் திருக்கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில், ஏராளமான அ.இ.அ.தி.மு.க.வினரும், பொதுமக்களும் பங்கேற்று மக்களின் முதல்வர் செல்வி. ஜெயலலிதாவுக்கு விரைவில் நீதிகிடைக்க வேண்டி பிரார்த்தனை செய்தனர்.

புதுச்சேரி அங்காளம்மன் கோவிலில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில், அ.இ.அ.தி.மு.க.வினரும், பொதுமக்களும் திரளான அளவில் கலந்துகொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00