மக்களின் முதல்வர் ஜெயலலிதா விரைவில் விடுதலை ஆக வேண்டி அ.இ.அ.தி.மு.க.வினரும், பொதுமக்களும் கோயில்களில் சிறப்புப் பிரார்த்தனை

Oct 1 2014 4:10PM
எழுத்தின் அளவு: அ + அ -

மக்களின் முதல்வர் செல்வி ஜெயலலிதா விரைவில் விடுதலை ஆக வேண்டி அ.இ.அ.தி.மு.க.வினரும், பொதுமக்களும் கோயில்களில் சிறப்புப் பிரார்த்தனை நடத்தினர்.

பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், மக்களின் முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதாவுக்கு எதிராக வழங்கியுள்ள தீர்ப்பைக் கண்டித்தும், அவர் விரைவில் விடுதலையாக வேண்டியும், சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள திருவட்டீஸ்வரர் கோயிலில் யாகம் நடத்தப்பட்டது. இதில், ஏராளமானோர் பங்கேற்றனர். இதேபோல், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோயிலில் மக்களின் முதல்வர் செல்வி ஜெயலலிதா விரைவில் விடுதலையாக வேண்டி ருத்ர யாகம் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டன. இதனிடையே, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோயிலில் பணிபுரியும் ஊழியர்கள், செல்வி ஜெயலிதாவுக்கு எதிரான தீர்ப்பைக் கண்டித்து, கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில், திருவொற்றியூர் வடிவுடையம்மன் திருக்கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதேபோல், திருவள்ளூர் மேற்கு மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவை சார்பில், பூந்தமல்லி ஊத்துகாட்டு எல்லையம்மன் கோயிலில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

சதிகாரர்கள் கருணாநிதி மற்றும் சுப்பிரமணியன்சுவாமி ஆகியோரின் சூழ்ச்சியை முறியடித்து, மக்களின் முதல்வர் செல்வி ஜெயலலிதா மீண்டும் அரியணை ஏற வேண்டி, காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவை சார்பில், குமரகோட்டம் சுப்ரமணியர் திருக்கோயிலில் அங்க பிரதட்சண பிரார்த்தனை நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் இதில் பங்கேற்றனர்.

தமிழக மக்களின் முதல்வர் செல்வி ஜெயலலிதா விரைவில் விடுதலையாகி மீண்டும் அரியணையேற வேண்டி, ஸ்ரீரங்கத்தில் விஷ்ணு சகஸ்ரநாமம், லலிதா சகஸ்ரநாமம், பாதுகா ஸஹஸ்ரம், திவ்ய பிரபந்தம் பாராயணம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அர்ச்சகர்களும், பொதுமக்களும் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாகச் சென்று நம்பெருமாளை வழிபட்டனர்.

இதனிடையே, ஸ்ரீரங்கம் கோயிலில் பணிபுரியும் முதுநிலை திருக்கோயில் பணியாளர்கள் சங்கத்தினர், செல்வி ஜெயலிதாவுக்கு எதிரான தீர்ப்பைக் கண்டித்து, கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை பிரசன்ன மாரியம்மன் ஆலயத்தில், மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவை சார்பில் கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது. இதில் அ.இ.அ.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும், பொதுமக்களும் திரளாக கலந்துகொண்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் நகரில் உள்ள தூய விழாகுள அன்னை ஆலயத்தில், வடக்கு மாவட்ட மாணவரணி சார்பில், மக்களின் முதல்வர் செல்வி ஜெயலலிதா விரைவில் விடுதலையாக வேண்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

இதேபோல், திருவத்திபுரம் பாலகுசாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் திருக்கோயிலில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவை சார்பில், வெள்ளி தேர் இழுத்து சிறப்பு வழிபாடு மற்றும் 108 பெண்கள் பங்கேற்ற சுமங்கலி பூஜை நடைபெற்றது. இதில் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்று, மக்களின் முதல்வர் செல்வி ஜெயலலிதா விரைவில் விடுதலையாக பிரார்த்தனை செய்தனர்.

மக்களின் முதல்வர் செல்வி ஜெயலலிதா விரைவில் விடுதலையாக வேண்டி, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடிவீஸ்வரம் இடது தீர்த்த பெருமாள் கோயிலில் அ.இ.அ.தி.மு.க.வினர் அங்க பிரதட்சணம் மேற்கொண்டனர்.

இதேபோல், வடசேரி சிவன் கோயிலிலிருந்து அ.இ.அ.தி.மு.க.வினர், மக்களின் முதல்வர் செல்வி ஜெயலலிதா விரைவில் விடுதலையாக பிரார்த்தனை செய்வதற்காக 66 கோயில்களுக்கு பாதயாத்திரை மேற்கொண்டுள்ளனர்.

மக்களின் முதல்வர் செல்வி ஜெயலலிதா விரைவில் விடுதலையாக வேண்டி, நெல்லை டவுன் சந்திவிநாயகர் கோயிலில் இன்று காலை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்று செல்வி ஜெயலலிதாவின் விடுதலைக்காக பிரார்த்தனை செய்தனர். இதேபோல், பேட்டை குளத்தாங்கரை முகையதீன் மீருசாகிபு தர்காவில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

நெல்லை புறநகர் மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவை சார்பில், நாங்குனேரி வானமாமலை பெருமாள் கோயிலில் சிறப்பு கூட்டு வழிபாடு நடைபெற்றது. இதில், ஏராளமான அ.இ.அ.தி.மு.க.வினரும், பொதுமக்களும் கலந்துகொண்டனர். செல்வி ஜெயலலிதா வழக்கிலிருந்து மீண்டு வந்து ஆட்சிப் பொறுப்பேற்று மக்களுக்கு சேவை செய்வார் என ஸ்ரீவானமாமலை ராமானுஜ ஜீயர் சுவாமிகள் தெரிவித்தார்.

பொய் வழக்கிலிருந்து மக்களின் முதல்வர் செல்வி ஜெயலலிதா விரைவில் விடுதலை பெற வேண்டி, தூத்துக்குடி மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவை சார்பில், கோவில்பட்டியில் சர்வ சமய கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

மக்களின் முதல்வர் செல்வி ஜெயலலிதா விரைவில் விடுதலையாக வேண்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் பொதுமக்கள் இடுப்பளவு நீரில் நின்று நமச்சிவாய ஜெபம் செய்தனர். மேலும் கடற்கரையில் மணலால் லிங்கம் செய்து சிவலிங்க பூஜை நடத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து ராமநாத சுவாமி ஆலயத்தில் சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. கோவை மாநகரில் 500-க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாகச் சென்று பட்டீஸ்வரன் கோயிலில் சிறப்புப் பூஜைகள் நடத்தினர்.

மக்களின் முதல்வர் செல்வி ஜெயலலிதா உடனடியாக விடுதலை பெற வேண்டி, புதுச்சேரி முதலியார்பேட்டை வன்னிய பெருமாள் கோயிலில் இன்று மகாசுதர்சன ஹோமம், ஸ்ரீலட்சுமி நரசிம்ம மாலா மந்திர ஹோமம் நடைபெற்றது. இதில், சட்டமன்ற உறுப்பினர், அ.இ.அ.தி.மு.க.வினர் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00