உத்தரப்பிரதேசத்தில் இளம் பெண் தீவைத்து எரிக்‍கப்பட்ட சம்பவம் - பல்வேறு சர்ச்சைகளுக்‍குப் பிறகு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் உன்னாவ் நகரில் இறுதிச்சடங்கு

Dec 8 2019 5:50PM
எழுத்தின் அளவு: அ + அ -

உத்தரப்பிரதேச மாநிலம், உன்னாவ் நகரில், பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகள் தீயிட்டு எரித்ததால் உயிரிழந்த இளம்பெண்ணின் உடல் பலத்த பாதுகாப்புடன் எரியூட்டப்பட்டது.

உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் நகரில், தன்னை பலாத்காரம் செய்தவர்கள் மீது வழக்கு தொடர்ந்த இளம்பெண், நீதிமன்ற விசாரணைக்குச் செல்லும் வழியில், பலாத்கார குற்றவாளிகள் உள்ளிட்ட 5 பேர் கொண்ட கும்பலால், பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரிக்கப்பட்டார். இதில், 95 சதவீதம் காயமடைந்த அந்தப் பெண், 40 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பெண் மீது தீ வைத்த 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம், நாடு முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், உயிரிழந்த இளம்பெண்ணின் குடும்பத்திற்கு, உத்தர பிரதேச மாநில அரசு சார்பில், 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது. அதேவேளையில், முதலமைச்சர் திரு. யோகி ஆதித்யாநாத் நேரில் வரவேண்டும் என்றும், குற்றவாளிகள் தூக்கிலிடப்படுவார்கள் என உத்தரவாதம் அளித்தால்தான், சகோதரியின் உடல் எரிக்கப்படும் என்றும் இளைய சகோதரி தெரிவித்திருந்தார். தொடர்ந்து, அமைச்சர் மற்றும் அதிகாரிகள், அவரை சமாதானப்படுத்திய பின், இறந்த பெண்ணின் உடல் எரியூட்டப்பட்டது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00