நீதிமன்ற நடைமுறைகள் மூலம், ஏழைகளை நீதி சென்றடைவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது - குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கவலை

Dec 8 2019 4:32PM
எழுத்தின் அளவு: அ + அ -

நீதிமன்ற நடைமுறைகள் மூலம், ஏழைகளை நீதி சென்றடைவதில் பெரும் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக, குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த் கவலை தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் நடைபெற்ற நீதிமன்ற திறப்பு விழாவில் பேசிய குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த், இன்றைய காலக்கட்டத்தில், ஏழைகள், தாழ்த்தப்பட்டவர்கள் புகார் மனுவுடன் செல்ல முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது என்றும், நீதிமன்ற நடவடிக்கைகள் என்பது, பெரும் செலவினமானதாக ஏழைகளுக்கு உள்ளது என்றும், இது மாற்றப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

அதிக செலவினத்தால் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தை ஏழைகளால் நாட முடிவதில்லை என்றுக் கூறிய அவர், ஏழைகள் முகத்தை நாம் நினைத்தால் அவர்களுக்கு சரியான தீர்வை காண முடியும் என்றும், இதற்கான ஒரு வழியாக தற்போது ஏழைகளுக்கு இலவச சட்ட மையம் உள்ளது என்றும், ஏழைகளுக்கும் நீதி கிடைக்க இன்னும் நாம் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த் கூறினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00