வெளிநாடு செல்ல அனுமதி ‍கோரி பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா மனு தாக்கல் - இன்றைக்குள் பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு

Dec 8 2019 3:21PM
எழுத்தின் அளவு: அ + அ -

மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள மற்றும் தொழில் தொடர்பாக, ஐரோப்பிய நாடான ஸ்பெயின் செல்வதற்கு அனுமதிக் கேட்டு, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவர் திரு. ராபர்ட் வதேரா மனு தாக்கல் செய்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியின் மருமகனும், அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவருமான, திரு. ராபர்ட் வதேரா மீது, அமலாக்கத் துறை பண மோசடி வழக்கு தொடர்ந்துள்ளது. ஐரோப்பிய நாடான பிரிட்டனில், சொத்துக்கள் வாங்கியதில் நடந்த மோசடி தொடர்பான இந்த வழக்கு, டெல்லி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் அவருக்கு முன்ஜாமின் வழங்கிய நீதிமன்றம், 'நீதிமன்ற அனுமதியில்லாமல் வெளிநாடு செல்லக் கூடாது' என்று தடை விதித்துள்ளது. கடந்த ஜூன் மாதத்தில், அமெரிக்கா மற்றும் நெதர்லாந்து செல்ல, அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

இந்நிலையில், மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள மற்றும் தொழில் தொடர்பாக, ஸ்பெயினுக்கு இரண்டு வாரங்கள் செல்வதற்கு அனுமதிக் கேட்டு, திரு. ராபர்ட் வதேரா சார்பில், டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து, பதில் மனு தாக்கல் செய்ய, அமலாக்கத் துறைக்கு, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00