ஹைதராபாத் என்கவுண்டருக்‍கு எதிராக பெண்கள் மற்றும் மனித உரிமை செயல்பாட்டாளர்கள் தொடர்ந்த வழக்கு - தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் வரும் 9ம் தேதி விசாரணை

Dec 7 2019 1:44PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஹைதராபாத் என்கவுண்டருக்‍கு எதிராக பெண்கள் மற்றும் மனித உரிமை செயல்பாட்டாளர்கள், தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு வரும் 9ம் தேதி விசாரணைக்‍கு வருகிறது.

தெலங்கானா பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொல்லப்பட்ட வழக்‍கை விசாரிக்‍க, அம்மாநில அரசு சார்பாக விரைவு நீதிமன்றம் அமைக்‍கப்பட்டது. ஆனால் விசாரணை தொடங்குவதற்கு முன்னரே, குற்றவாளிகள் 4 பேரும் நேற்று அதிகாலை என்கவுண்டர் செய்து கொல்லப்பட்டனர். சைபராபாத் பகுதியில் நடைபெற்ற என்கவுண்டர் குறித்து, காவல் ஆணையர் திரு. வி.சி.சஜ்ஜனார் நேற்று செய்தியாளர்களிடம் விளக்‍கம் அளித்தார்.

சம்பவம் குறித்து விசாரணை நடத்த, குற்றவாளிகள், சம்பவ இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டபோது, காவலர்களின் துப்பாக்‍கிகளை பறித்து தாக்‍குதல் நடத்த முயன்றதாகவும், அப்போது, சுட்டுக்‍கொல்லப்பட்டதாகவும் தெரிவித்தார். இதுகுறித்து, எந்த ஆணையத்திலும் விளக்‍கம் அளிக்‍க தயார் என்றும் கூறினார்.

இதனிடையே, இந்த என்கவுண்டர் தொடர்பான வழக்கு, ​தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் வரும் 9ம் தேதி விசாரணைக்‍கு வரவுள்ளது. பெண்கள் மற்றும் மனித உரிமை செயல்பாட்டாளர்கள் சார்பாக தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்‍கது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00