அதிகரித்து வரும் காற்று மாசு காரணமாக டெல்லி வாழ் மக்‍களின் ஆயுள் 17 ஆண்டுகள் வரை குறைய வாய்ப்பு - ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

Nov 21 2019 6:23PM
எழுத்தின் அளவு: அ + அ -

டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு காரணமாக அங்கு வசித்துவரும் மக்‍களின் ஆயுள் 17 ஆண்டுகள் வரை குறையலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

டெல்லியில் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டால், மக்‍கள் பல்வேறு சுவாச பிரச்னைகளுக்‍கு ஆளாகி வருகின்றனர். உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்களின்படி அனுமதிக்கப்பட்ட வரம்பை விட 25 மடங்கு அதிக நச்சுக் காற்றை, டெல்லி மக்‍கள் தற்போது சுவாசித்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் டெல்லியில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு காரணமாக, அங்கு வசித்துவரும் மக்‍களின் ஆயுட்காலம், சராசரியை விட 17 ஆண்டுகள் குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த 20 நாட்களில், டெல்லியில் 30 இடங்களில் காற்றின் தரக்‍ குறியீடு, 254-க்கும் அதிகமான நிலையிலேயே உள்ளது. காற்று மாசு பாதிப்பால் 2017-ம் ஆண்டு வரை, தெற்காசிய நாடுகளில் சுமார் 30 லட்சம் பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00