பொதுத்துறை நிறுவன பங்குகளை விற்பனை செய்வது, நாட்டின் பொருளாதாரத்தை மோசமான நிலைக்கு கொண்டு செல்லும் - மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

Nov 21 2019 6:22PM
எழுத்தின் அளவு: அ + அ -

பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்வது, நாட்டின் பொருளாதாரத்தை மேலும் மோசமான நிலைக்கு கொண்டு செல்லும் என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், இந்திய கப்பல் கார்ப்ரேஷன் உள்ளிட்ட 5 பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை பங்குகளை விற்க, பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கி இருப்பதாக, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். மேலும் சில பொதுத்துறை நிறுவனங்களில், அரசின் பங்குகளை 51 சதவீதத்துக்கும் கீழே வைத்துக்கொள்ளவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்ததாகவும் அவர் தெரிவித்தார். பொருளாதார மந்தநிலையை சரிசெய்வதற்காக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக மத்திய அரசு தெரிவித்தது.

பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்கும் இந்த நடவடிக்கை, பொருளாதார மந்தநிலையை சீர்படுத்த தீர்வாகாது என்றும், இது நாட்டின் பொருளாதாரத்தை மேலும் மோசமான நிலைக்கு கொண்டு செல்லும் என்றும் மேற்குவங்க முதலமைச்சர் செல்வி மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்வது குறித்து, நிபுணர்களுடன் பிரதமர் ஆலோசிக்க வேண்டும் என்றும், தேவைப்பட்டால் அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்டி ஆலோசிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00