தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்கு வரும் டிசம்பர் 1-ம் தேதி முதல் "ஃபாஸ்ட் டேக்" வசதி கட்டாயம்

Nov 19 2019 9:55PM
எழுத்தின் அளவு: அ + அ -

தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்கு, வரும் டிசம்பர் 1-ம் தேதி முதல் fastag வசதி கட்டயமாக்கப்பட்டுள்ளது.

fastag என்பது, ரேடியோ அலைக்கற்றை மூலம் இயங்கும் சிறிய ஸ்டிக்கர் ஆகும். இந்த ஸ்டிக்கர் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டிருக்கும். இந்த fastag ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்கள் சுங்கச்சாவடியை கடக்கும்போது, தானாகவே அதனுடன் இணைக்கப்பட்டுள்ள வங்கிக்கணக்கிலிருந்து கட்டணத்தை எடுத்துக் கொள்ளும்படி நிறுவப்பட்டிருக்கும். இதனால் fastag ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்கள் சுங்கச்சாவடிகளில் நிற்க வேண்டிய அவசியமில்லை. மேலும், fastag வாகனங்கள் செல்ல அனைத்து சுங்கச்சாவடிகளிலும் தனி தடம் உள்ளது.

போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக கொண்டுவரப்பட்ட இந்த வசதி, தமிழ்நாட்டில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் வாகனங்களில் மட்டுமே உள்ளதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இந்த நிலையில், தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் அனைத்து வாகனங்களுக்கும் வரும் டிசம்பர் 1-ம் தேதி முதல் fastag வசதி கட்டயமாக்கப்பட்டுள்ளது. இந்த வசதியில்லாத வாகனங்கள், பாஸ்டேக் தடத்தின் வழியே சென்றால், இரண்டு மடங்கு கட்டணம் செலுத்த வேண்டும் என தேசிய நெடுஞ்சாலைகள் துறை ஆணையம் தெரிவித்துள்ளது.

fastag வசதிக்கான அட்டையை பெறுவதற்கு, சுங்கச்சாவடிகளில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றுக்கும் மேற்பட்ட வாகனங்களை வைத்திருப்பவர்கள், ஒவ்வொறு வாகனத்திற்கும் தனித்தனியாக fastag அட்டையை பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00