டெல்லியில் பேரணியில் ஈடுபட்ட ஜே.என்.யூ. மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்திய விவகாரம் - உயர்மட்ட விசாரணை நடத்த வலியுறுத்தி ஆயிரக்கணக்கான மாணவர்கள் மீண்டும் போராட்டம்

Nov 19 2019 9:13PM
எழுத்தின் அளவு: அ + அ -

டெல்லியில் பேரணியில் ஈடுபட்ட ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியது குறித்து உயர்மட்ட விசாரணை நடத்த வலியுறுத்தி, ஆயிரக்கணக்கான மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கல்விக் ‍கட்டணம் மற்றும் விடுதிக் கட்டண உயர்வை கண்டித்து, கடந்த ஒரு மாதமாக பல்கலைக் கழக மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த வாரம் மாணவர்கள் போராட்டம் விஸ்வ ரூபம் எடுத்ததையடுத்து, பல்கலைக்கழக நிர்வாகம் கட்டண உயர்வை குறிப்பிட்ட அளவு குறைத்தது. ஆனால், கட்டண உயர்வை முழுமையாக திரும்பபெற வலியுறுத்தி மாணவர்கள் தொடர்ந்து போராட்டதில் ஈடுபட்டு வந்தனர்.

நேற்று நாடாளுமன்றத்தை நோக்‍கி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்‍கழக மாணவர்கள் பேரணி சென்றனர். இதனால், நாடாளுமன்றத்தை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்‍கப்பட்டது. பேரணி சென்ற மாணவர்களை போலீசார் தடுத்ததால், கலவரம் ஏற்பட்டது. அப்போது மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களில் 100க்கும் மேர்பட்டோரை கைது செய்த காவல்துறையினர் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். போலீசாரின் நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்து, மாணவர்கள் மீண்டும் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக பிற கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். மாணவர்கள் மீது தடியடி நடத்தியது குறித்து உயர்மட்ட விசாரணை நடத்த வலியுறுத்தி, காங்கிரஸ் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளைச் சேர்ந்த மாணவர் அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், டெல்லி முழுவதும் பாதுகாப்பு பணியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00