மகாராஷ்டிராவில் நீடிக்கும் இழுபறி : சிவசேனாவுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைப்பது தொடர்பாக காங்கிரசும், தேசியவாத காங்கிரசும் ஆலோசனை நடத்த முடிவு

Nov 19 2019 3:50PM
எழுத்தின் அளவு: அ + அ -

மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைப்பது தொடர்பாக காங்கிரசும், தேசியவாத காங்கிரசும் தங்களுடைய கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளதால், தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்‍கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். தேசியவாத காங்கிரஸ் தலைவர் திரு.சரத்பவார், நேற்று டெல்லியில் காங்கிரஸ் தலைவர் திருமதி. சோனியா காந்தியை சந்தித்து பேசினார்.

50 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திரு.சரத்பவார், சிவசேனாவுடன் கூட்டணி ஆட்சி அமைப்பது குறித்து காங்கிரசும், தேசியவாத காங்கிரசும் தங்களுடைய கூட்டணி கட்சிகளுடன் கலந்து பேச வேண்டியுள்ளதாக தெரிவித்தார். இந்நிலையில், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள கேரளாவைச் சேர்ந்த கட்சிகள் சிவசேனாவுடன் கூட்டணி அமைக்க எதிர்ப்பு காட்டுகின்றன. இதனிடையே, சிவசேனா தலைவர்களில் ஒருவரான திரு.சஞ்சய் ராவத், திருமதி. சோனியா காந்தியையும், திரு.சரத்பவாரையும் தனித்தனியே சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது எடுக்கப்பட்ட முடிவு குறித்து தெரிவிக்கப்படவில்லை.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00