2025-ம் ஆண்டுக்குள் ரூ.35,000 கோடி ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி இலக்கு : பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

Nov 19 2019 2:22PM
எழுத்தின் அளவு: அ + அ -

வரும் 2025-ம் ஆண்டுக்குள் 35 ஆயிரம் கோடி ரூபாய் அளவில் ராணுவ தளவாடங்களை ஏற்றுமதி செய்ய இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

தென்கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் அதன் கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சா்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக திரு.ராஜ்நாத் சிங் தாய்லாந்து சென்றார். தலைநகா் பாங்காக்கில் 'இந்தியாவின் எழுச்சி' என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய அவர், அடுத்த 6 ஆண்டுகளுக்குள் பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் முதன்மையான நாடாக மாற இந்தியா உறுதி பூண்டுள்ளதாக குறிப்பிட்டார். 2025-ம் ஆண்டுக்குள் விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறையில் 70 ஆயிரம் கோடி முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் 20 லட்சம் முதல் 30 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும் என்றும் தெரிவித்தார். தொழில்நுட்ப தகவல்களை பகிர்ந்துகொள்ள பல நாடுகளுடன் இந்தியா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாகவும் திரு.ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00