MP4 ஃபைல்கள் மூலமே வாட்ஸ் ஆப் பயனாளர்களின் மொபைல் மற்றும் கணினிகளில், ஹேக்கர்கள் ஊடுருவுகின்றனர் - வாட்ஸ்ஆப் பயனாளர்களுக்கு எச்சரிக்கை

Nov 18 2019 9:43PM
எழுத்தின் அளவு: அ + அ -

MP4 ஃபைல்கள் மூலமே வாட்ஸ் ஆப் பயனாளர்களின் மொபைல் மற்றும் கணினிகளில், ஹேக்கர்கள் ஊடுருவுவதாக மத்திய அரசு சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்திய பிரபலங்கள் பலரின் வாட்ஸ் ஆப் கணக்குகள் உளவு பார்க்கப்பட்டதாக சமீபத்தில் சர்ச்சை எழுந்தது. இந்நிலையில், இந்திய கணினி அவசரகால பதிலளிக்கும் குழு, வாட்ஸ் ஆப் பயனாளர்களுக்‍கு எச்சரிக்‍கை விடுத்துள்ளது. MP4 ஃபைல்கள் மூலமே வாட்ஸ் ஆப்பிற்குள் ஹேக்கர்கள் ஊடுருவுவதாக தெரிவித்துள்ளது. MP4 ஃபைல்கள் வாட்ஸ் ஆப் வாடிக்கையாளர்களால் டவுண்லோட் செய்யப்படும் போதும் மட்டுமே, மால்வேர்களை பயன்படுத்தி ஹேக்கர்களால் உள்ளே நுழைய முடியும் என்றும், ஒருமுறை ஒருவரின் வாட்ஸ் ஆப் கணக்கிற்குள் ஹேக்கர்கள் ஊடுருவி விட்டால், அந்த ஃபோன் வைத்திருக்கும் நபர் இருக்கும் இடத்தை கூட ஹேக்கர்களால் தெரிந்து கொள்ள முடியும் என்றும் எச்சரித்துள்ளது.

ஒருவரிடம் இருந்து வாட்ஸ் ஆப்பிற்கு வரும் MP4 ஃபைல்களை நாம் விரும்பினால் மட்டுமே டவுண்லோடு செய்ய முடியும். நாம் விரும்பாவிட்டால் அந்த குறிப்பிட்ட ஃபைல் நமது மொபைல் ஃபோனில் டவுண்லோடு ஆகாது. அதே சமயம், ஒரு ஃபைலை நாம் திறந்ததும், அது தாமாக டவுண்லோடு ஆகி, நமது ஃபோன் மெமரிக்கு செல்வதை தடுப்பதற்கான வசதியை வாட்ஸ் ஆப் சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. எனவே, பாதுகாப்பு வசதிகளை பயன்படுத்தி வாட்ஸ் ஆப் பயன்பாட்டாளர்கள், தங்கள் மொபைல் மற்றும் கணினிகளில், ஹேக்கர்கள் ஊடுருவுவதை தவிர்க்‍க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00