ராஜஸ்தான் மாநிலம் தார் பாலைவனத்தில் நடைபெறும் பிரம்மாண்ட போர் ஒத்திகை நிகழ்ச்சி - 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் பங்கேற்பு

Nov 17 2019 6:20PM
எழுத்தின் அளவு: அ + அ -

ராஜஸ்தான் மாநிலம் தார் பாலைவனத்தில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் பங்கேற்றுள்ள போர் ஒத்திகை நிகழ்ச்சி தொடங்கியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரின் தலைமையகமாக கொண்டுள்ள தென்மண்டலத்தின் சுதர்சன் சக்ரா என்ற படை பிரிவின் மிகப்பெரிய போர் ஒத்திகை நிகழ்ச்சி தார் பாலைவனத்தில் தொடங்கியுள்ளது. இந்திய எல்லைக்கு தென்பகுதியில் உள்ள எதிரி நாட்டின் சிந்து நதி பகுதியை குறிவைத்து இந்த போர் ஒத்திகை நடத்தப்படுவதால், இதற்கு சிந்து சுதர்ஸன் என பெயரிடப்பட்டுள்ளது.

பிரம்மாண்டமான இந்தப் போர் ஒத்திகை நிகழ்ச்சியில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களும், 700 ராணுவ வாகனங்களும், 300 பீரங்கி வாகனங்களும் பங்கேற்றுள்ளன. இந்த ஆண்டிலும், அடுத்த ஆண்டிலும் 4 ஆயிரத்து 366 கோடி ரூபாய் செலவில் ராணுவத்தில் 100 பீரங்கி வாகனங்கள் இணைக்கப்படும் நிலையில், தற்போதைய ராணுவ ஒத்திகையில் அதிநவீன K9 வஜ்ரா பீரங்கி வாகனம் உள்ளிட்ட 18 பீரங்கி வாகனங்கள் பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது. நேற்று தொடங்கிய இந்த போர் ஒத்திகை வரும் 5ம் தேதி நிறைவடைகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00