மகாராஷ்டிராவில் சிவசேனா-காங்கிரஸ்-என்.சி.பி. சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்‍க முடிவு - சிவசேனாவுக்‍கு முதலமைச்சர் பதவி உறுதி

Nov 15 2019 1:53PM
எழுத்தின் அளவு: அ + அ -

மஹாராஷ்டிர மாநிலத்தில், காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணியுடன் சேர்ந்து, சிவசேனா கட்சி ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளது. முதலமைச்சர் பதவியை சிவசேனாவுக்கு வழங்க, காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி சம்மதம் தெரிவித்துள்ளது.

மஹாராஷ்டிர மாநிலத்தில், குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே, அம்மாநிலத்தில், புதிய ஆட்சி அமைப்பது குறித்து, ‍தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணியுடன், ‌திரு. உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்நிலையில், சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே கூட்டணி பேச்சுவார்த்தை இறுதி செய்யப்பட்டு விட்டதாகக் கூறப்படுகிறது. முதலமைச்சர் பதவியை சிவசேனாவுக்கு அளிக்கவும், தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணி சம்மதம் தெரிவித்துள்ளது. 16 , 14 , 12 என்ற விகித அடிப்படையில், அமைச்சரவை குறித்தும் இறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்கி‌‌‌டையே, நாளை மதியம் 3 மணிக்கு, ஆளுநர் திரு. பகத் சிங் கோஷ்யாரியை சந்தித்து, சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00