பிரதமர் மோடி‌யையும், அமித் ஷாவையும் சிவசேனா கட்சி அவமானப்படுத்தி விட்டது - மஹாராஷ்டிர முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் சாடல்

Nov 8 2019 6:08PM
எழுத்தின் அளவு: அ + அ -
முதலமைச்சர் பதவியை பகிர்வது குறித்து, சிவசேனா கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை என்றும், பிரதமர் மோடி‌யையும், அமித் ஷாவையும் சிவசேனா கட்சி அவமானப்படுத்தி விட்டது என்றும் மஹாராஷ்டிர மாநில முன்னாள் முதலமைச்சர் திரு. தேவேந்திர பட்னவிஸ் தெரிவித்துள்ளார்.

மஹாராஷ்டிர மாநிலத்தில் மீண்டும் ஆட்சி அமைக்க, சிவசேனா கட்சி ஆதரவு அளிக்காததால், முதலமைச்சர் பதவியை, திரு. தேவேந்திர பட்னவிஸ் ராஜினாமா செய்தார். மாநில ஆளுநர் திரு. பகத் சிங் கோஷ்யாரியை சந்தித்து, அவர் ராஜினாமா கடிதம் அளித்தார்.

இதன்பின்னர், மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய திரு. தேவேந்திர பட்னவிஸ், கூட்டணி ஒப்பந்தத்தை சிவசேனா கட்சி மீறி விட்டது என்றும், சுழற்சி முறை முதலமைச்சர் குறித்து, அக்கட்சியுடன் ஒரு முறை கூட பேச்சுவார்த்‌தை நடத்தப்படவில்‌லை என்றும் தெரிவித்தார்.

பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சிவசேனா கட்சி அவமானப்படுத்தி விட்டது என்று குற்றஞ்சாட்டிய அவர், உத்தவ் தாக்கரேவிடம் பேச பல முறை மொபைல் போனில் அழைத்ததாகவும், ஆனால், அவர் தனது அழைப்பை எடுக்கவில்லை என்றும், கூட்டணி தொடர்பாக பேச பா.ஜ.க., தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00