மஹாராஷ்ட்ராவில் ஆட்சியமைக்‍க பா.ஜ.க.-வும், சிவசேனாவும் ஏற்படுத்தும் தாமதம், மாநிலத்தின் பொருளாதாரத்தை பாதிக்‍கும் - தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கண்டனம்

Nov 8 2019 4:28PM
எழுத்தின் அளவு: அ + அ -
மஹாராஷ்ட்ராவில் ஆட்சியமைக்‍க பா.ஜ.க.-வும், சிவசேனாவும் ஏற்படுத்தும் தாமதம், மாநிலத்தின் பொருளாதாரத்தை பாதிக்‍கும் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் திரு. சரத்பவார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மஹாராஷ்ட்ராவில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பா.ஜ.க, சிவசேனா இடையே ஆட்சி அமைப்பதில் சுமூக உடன்பாடு எட்டப்படவில்லை. சுழற்சி முறையில் முதலமைச்சர் பதவி வேண்டும் என்பதில் சிவசேனாவும், முடியாது என்பதில் பா.ஜ.க.வும் உறுதியாகவுள்ள நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியாகி 16 நாட்கள் ஆகிவிட்ட போதிலும், ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது.

மஹாராஷ்ட்ராவில், தற்போதைய சட்டசபையின் பதவிக்காலம் நாளையுடன் முடிவடையவுள்ளதால், இன்றைக்‍குள் புதிய அரசு அமையாவிட்டால், சட்டசபையை கலைத்து விட்டு, குடியரசுத்தலைவர் ஆட்சிக்கு பரிந்துரைக்க வேண்டி இருக்கும் என்று, அம்மாநில ஆளுநர் எச்சரித்திருந்தார். ஆளுநரின் கெடு இன்றுடன் முடிவடைவதால், மஹாராஷ்ட்ராவில் உச்சக்கட்ட அரசியல் பரபரப்பு நிலவுகிறது.

இந்நிலையில், மத்திய அமைச்சர் திரு. ராம்தாஸ் அத்வாலேவும், தேசியவாத காங்கிரஸ் தலைவர் திரு. சரத் பவாரும் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர். சந்திப்புக்‍கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சரத் பவார், மஹாராஷ்ட்ரா நிலவரம் குறித்து ஆலோசித்ததாகவும், அங்கு ஆட்சி அமைக்‍கும் பொறுப்பு, பா.ஜ.க. மற்றும் சிவசேனாவுக்‍கே உள்ளதாகவும் கூறினார். ஆட்சியமைக்‍க, பா.ஜ.க.-வும், சிவசேனாவும் ஏற்படுத்தும் தாமதம், மாநிலத்தின் பொருளாதாரத்தை பாதிக்‍கும் என பவார் கண்டனம் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3705.00 RS. 4041.00
மும்பை Rs. 3790.00 Rs. 3890.00
டெல்லி Rs. 3785.00 Rs. 3905.00
கொல்கத்தா Rs. 3815.00 Rs. 3955.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.60 Rs. 50000.00
மும்பை Rs. 50.60 Rs. 50000.00
டெல்லி Rs. 50.60 Rs. 50000.00
கொல்கத்தா Rs. 50.60 Rs. 50000.00