ஐ.என்.எக்‍ஸ். மீடியா வழக்‍கில் ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்த அமலாக்‍கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி - ப.சிதம்பரத்தை நாளை கைது செய்ய திட்டம்

Oct 16 2019 10:49AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில், திஹார் சிறையில் அடைக்‍கப்பட்டுள்ள ப.சிதம்பரத்திடம் 30 நிமிடங்கள் விசாரணை மேற்கொள்ளவும், தேவைப்பட்டால் கைது செய்துகொள்ளவும், அமலாக்‍கத்துறைக்‍கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

ஐ.என்.எக்ஸ். மீடியா சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கில், சி.பி.ஐ., அதிகாரிகள் ப.சிதம்பரத்தை கைது செய்ததை அடுத்து, அவர் நீதிமன்றக் காவலில், திஹார் சிறையில் அடைக்‍கப்பட்டுள்ளார். இவ்வழக்‍கில் அமலாக்‍கத்துறையும், தனியாக வழக்‍குப்பதிவு செய்துள்ளது. சிதம்பரத்தை கைது செய்து விசாரணை நடத்த வேண்டியிருப்பதால், அதற்கு அனுமதி அளிக்‍குமாறு, டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில், அமலாக்‍கத்துறை மனுதாக்‍கல் செய்தது.

இந்த மனு மீது, டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில், நீதிபதி திரு. Ajay Kumar Kuhar முன்னிலையில், நேற்று விசாரணை நடைபெற்றது. அப்போது, சிதம்பரத்தை கைது செய்து விசாரணை நடத்தவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக அமலாக்‍கத்துறை தெரிவித்தது. இதற்கு சிதம்பரம் தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்‍கப்பட்டது. C.B.I. அதிகாரிகள் ஏற்கெனவே சிதம்பரத்தை கைது செய்து, சிறையில் அடைத்திருப்பதால், ஒரேமாதிரியான வழக்‍கில் இன்னொருமுறை அவரை கைது செய்யக்‍கூடாது என வலியுறுத்தக்‍கப்பட்டது.

இந்நிலையில், திஹார் சிறையில் அடைக்‍கப்பட்டுள்ள ப.சிதம்பரத்திடம் 30 நிமிடங்கள் விசாரணை மேற்கொள்ளவும், தேவைப்பட்டால் கைது செய்து கொள்ளவும், அமலாக்‍கத்துறைக்‍கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து, சிதம்பரத்தை நாளை கைது செய்ய, அமலாக்‍கத்துறை, திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00