உத்தரபிதேச மாநிலத்தில் அடுக்‍குமாடி குடியிருப்பில் சிலிண்டர் வெடித்த விபத்தில் - 10 பேர் உயிரிழப்பு : பலர் நிலைமை கவலைக்‍கிடம்

Oct 14 2019 2:08PM
எழுத்தின் அளவு: அ + அ -

உத்தரபிதேச மாநிலம் Mau நகரில், வீட்டில் சிலிண்டர் வெடித்துச் சிதறியதில் 10 பேர் உயிரிழந்தனர். பலரது நிலைமை கவலைக்‍கிடமாக உள்ளது.

Mau நகரில் 2 மாடிக்‍ குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில், சிலிண்டர் வெடித்துச் சிதறியது. இதில், அந்தக்‍ கட்டடமே சரிந்து விழுந்தது. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். கட்டட இடிபாடுகளில் பலர் சிக்‍கி இருக்‍கலாம் என அஞ்சப்படுகிறது. சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப் படையினர், இடிபாடுகளில் சிக்‍கி இருப்பவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு, மருத்துவமனைக்‍கு அனுப்பி வைக்‍கப்பட்டனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்‍கு, உத்தரபிரதேச முதலமைச்சர் திரு. யோகி ஆதித்யநாத் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளதுடன், பாதிக்‍கப்பட்டவர்களின் குடும்பங்களுக்‍கு தேவையான உதவிகளை விரைந்து மேற்கொள்ள அதிகாரிகளுக்‍கு உத்தரவிட்டுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00