இந்திய கலாசாரத்தை பின்பற்றியே, ரஃபேல் விமானத்திற்கு சாஸ்திரா பூஜை - அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்‍கு ஆதரவாக உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்‍கம்

Oct 9 2019 6:31PM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்திய கலாச்சாரத்தை பின்பற்றியே, ரஃபேல் விமானங்களுக்கு பூஜை செய்யப்பட்டதாக, பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங்கின் நடவடிக்‍கைக்‍கு, உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா ஆதரவு தெரிவித்துள்ளார்.

ஃபிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி, முதல் ரஃபேல் போர் விமானம், பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங்கிடம் நேற்று ஒப்படைக்‍கப்பட்டது.

விஜயதசமி தினமான நேற்று, தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட ரஃபேல் விமானத்திற்கு ராஜ்நாத் சிங் பூஜை செய்தார். விமனத்தின் மீது குங்குமத்தில் ஓம் என்று எழுதி, மலர்கள் தூவி, தேங்காய் உடைத்து சிறப்பு பூஜை நடத்தினார். விமானத்தின் டயர்களுக்‍கு கீழே எலுமிச்சை பழங்கள் வைக்கப்பட்டு அதன் மீது போர் விமானம் ஏற்றப்பட்டது. ராஜ்நாத் சிங்கின் நடவடிக்‍கைக்‍கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தது. மத நிகழ்ச்சியான விஜய தசமியையும், ரஃபேல் போர் விமானத்தையும் ஏன் இணைக்க வேண்டும் என கேள்வி எழுப்பியது.

இதற்கு, பதிலளித்துள்ள பா.ஜ.க. தலைவரும், உள்துறை அமைச்சருமான திரு. அமித்ஷா, ராஜ்நாத் சிங்கிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அமித்ஷா, இந்திய கலாச்சாரத்தை பின்பற்றியே, ரஃபேல் விமானங்களுக்கு சாஸ்திரா பூஜை செய்யப்பட்டதாக கூறினார். இந்திய கலாச்சாரத்திற்கு எதிரான காங்கிரஸ், எதை விமர்சிக்க வேண்டும், எதை விமர்சிக்க கூடாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 49.50 Rs. 49000.00
மும்பை Rs. 49.50 Rs. 49000.00
டெல்லி Rs. 49.50 Rs. 49000.00
கொல்கத்தா Rs. 49.50 Rs. 49000.00