உலக அளவில் பொருளாதார போட்டித்திறன் குறியீட்டு நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்‍கு பின்னடைவு - 68வது இடத்திற்கு தள்ளப்பட்ட அவலம்

Oct 9 2019 5:45PM
எழுத்தின் அளவு: அ + அ -
உலக அளவில் பொருளாதார போட்டித்திறன் குறியீட்டு நாடுகள் பட்டியலில் இந்தியா பின்நோக்‍கி தள்ளப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 58 வது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 68 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

ஜெனீவாவை தலைமையிடமாக கொண்ட உலக பொருளாதார அமைப்பு, ஆண்டுதோறும், GCI என அழைக்கப்படும், உலக நாடுகளின் பொருளாதார போட்டித்திறன் குறியீடு எண் பட்டியலை வெளியிட்டு வருகிறது. ஒரு நாட்டின், பொதுத்துறை, தொழிலாளர் சக்தி, பன்முகத்தன்மை மற்றும் உள்கட்டமைப்பு உள்ளிட்ட காரணங்களை அடிப்படையாகக் கொண்டு, உலக பொருளாதார போட்டித்திறன் குறியீட்டு எண் கணக்கிடப்படுகிறது. இந்த அறிக்கை, உலக நாடுகளின் பொருளாதரக் கட்டமைப்பை மதிப்பிடுவதில் முக்கியத்துவம் பெறுகிறது.

அந்த வகையில், இந்தாண்டுக்கான, உலக நாடுகளின் பொருளாதார போட்டித்திறன் குறியீட்டு எண் பட்டியலில் கடந்தாண்டு, சற்று பின்தங்கியிருந்த சிங்கப்பூர், இந்தாண்டு, 84.8 புள்ளிகளுடன், முதலிடத்தை, தனதாக்கிக் கொண்டுள்ளது. 83.7 புள்ளிகளுடன் அமெரிக்கா இரண்டாம் இடத்தில் உள்ளது. ஹாங்காங், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து ஆகியவை, முறையே, மூன்று, நான்கு, ஐந்தாம் இடங்களை பிடித்துள்ளன. ஜப்பான், ஜெர்மனி, சுவீடன், இங்கிலாந்து, டென்மார்க் ஆகியவை, அடுத்தடுத்த இடங்களை தனதாக்கிக் கொண்டுள்ளன. 62 புள்ளிகளுடன் கடந்தாண்டு 58ஆவது இடத்தில் இருந்த இந்தியா, இம்முறை, 61.4 புள்ளிகளுடன், 10 இடங்கள் சரிந்து, 68-ஆவது இடத்தில் உள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 49.30 Rs. 49000.00
மும்பை Rs. 49.30 Rs. 49000.00
டெல்லி Rs. 49.30 Rs. 49000.00
கொல்கத்தா Rs. 49.30 Rs. 49000.00