இந்தி மொழியை திணிக்‍க வேண்டும் என ஒருபோதும் கூறவில்லை - கடும் எதிர்ப்பு வலுத்ததால் பின்வாங்கினார் அமித்ஷா

Sep 18 2019 7:38PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஹிந்தி மொழி தொடர்பான தமது கருத்து தவறாக மக்‍களிடம் கொண்டு போய் சேர்த்துவிட்டதாக மத்திய அமைச்சர் திரு. அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார்.

உலக அளவில் இந்தியாவை அடையாளப்படுத்த, நாட்டின் ஒரே மொழி ஹிந்தியாக இருக்க வேண்டும் என, கடந்த வாரம் மத்திய அமைச்சர் திரு. அமித்ஷா கருத்து தெரிவித்திருந்தார். இது நாடு முழுவதும் அதிர்வலைகளை உண்டாக்‍கியதுடன், தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் திரு. அமித்ஷாவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், இதுதொடர்பாக திரு. அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார். அதில், ஹிந்தி மொழியை திணிக்க வேண்டும் என தாம் கூறவில்லை என்றும், தாய் மொழிக்குப் பின் இரண்டாவது மொழியாக இந்தியைக் கற்றுக் கொள்ள வேண்டும் என தாம் வேண்டுகோள் விடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00