தலித் வன்கொடுமை தடுப்புச் சட்டம் குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்த மத்திய அரசின் மனு - விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைப்பு

Sep 18 2019 7:29PM
எழுத்தின் அளவு: அ + அ -

தலித் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் அளிக்‍கப்படும் புகாரின் அடிப்படையில், விசாரணையின்றி யாரையும் கைது செய்யக் கூடாது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுமீது விசாரணை முடிவடைந்தது. 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு, தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது.

தலித் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் அளிக்‍கப்படும் புகாரின் அடிப்படையில், விசாரணையின்றி யாரையும் கைது செய்யக் கூடாது என உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தீர்ப்பளித்தது. இதனையடுத்து, பல்வேறு அமைப்புகள் சார்பில், உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இருந்தபோதிலும், எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் விசாரணையின்றி யாரையும் கைது செய்யக்‍கூடாது என உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மீண்டும் உறுதிப்படுத்திய நீதிபதிகள், இந்த தீர்ப்பில் மீண்டும் எந்த ஒரு உத்தரவும் பிறப்பிக்‍க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தனர்.

இதனிடையே, உச்சநீதிமன்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரியும், ஏற்கனவே இருந்தது போல், தலித் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை மீண்டும் கடுமையானதாக்கவும், மத்திய அரசு, உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த சீராய்வு மனு மீதான விசாரணை, நீதிபதிகள் அருண் மிஸ்ரா, எம்.ஆர்.ஷா, கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வுக்‍கு மாற்றப்பட்டது. இந்த மனு மீதான விசாரணைகள் முடிவடைந்த நிலையில் நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00