எந்த மொழியும் தமிழை ஆதிக்கம் செய்வதை அனுமதிக்‍க முடியாது - திகார் சிறையில் உள்ள சிதம்பரம் தரப்பில் ட்விட்டரில் பதிவு

Sep 18 2019 6:38PM
எழுத்தின் அளவு: அ + அ -

எந்த மொழியும் தமிழ் மொழியை ஆதிக்கம் செய்வதை அனுமதிக்‍க முடியாது என்றும், இந்தி மொழி மட்டுமே இந்திய மக்களை ஒன்றுபடுத்தும் என்ற நச்சுக் கருத்தை எதிர்த்து போராடும் காலம் வந்திருப்பதாகவும், திகார் சிறையில் அடைக்‍கப்பட்டுள்ள ப.சிதம்பரம் சார்பில், ட்விட்டரில் பதிவிடப்பட்டுள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில், சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர், தனது குடும்பத்தினர் மூலம் ட்விட்டர் பக்கத்தில் கருத்துகளை பதிவு செய்து வருகிறார்.

சிதம்பரத்தின் ட்விட்டர் பக்‍கத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ள பதிவில், தமிழர்களுக்கு சவால் விடப்பட்டிருப்பதாகவும், இந்தி மொழி மட்டுமே இந்திய மக்களை ஒன்றுபடுத்தும் என்ற நச்சுக் கருத்தை எதிர்த்து போராடும் காலம் வந்திருப்பதாகவும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

தமிழ் இனத்தின் அடையாளமே தமிழ்மொழி தான் என்றும், எந்த மொழியும் தமிழ் மொழியை ஆதிக்கம் செய்வதற்கு ஒருநாளும் அனுமதிக்க மாட்டோம் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்தி மொழி பேசாத அல்லது இந்தி மொழியைத் தாய்மொழியாக ஏற்றுக்கொள்ளாத பிறமொழி மக்களுடன் இணைந்து போராடுவதற்கு நாம் தயாராக வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00