அமெரிக்‍கா செல்லும்போது பாகிஸ்தான் வான்வழியை பயன்படுத்த பிரதமர் மோடிக்கு அனுமதி மறுப்பு - பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் அறிவிப்பு

Sep 18 2019 7:59PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஐ.நா. சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்‍கா செல்லும் பிரதமர் திரு.மோடியின் விமானம், பாகிஸ்தான் வான்வழியே செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் திரு. நரேந்திர மோடி, வரும் 22-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 22ம் தேதி டெக்சாஸ் மாகாணம் Huston-ல் வெளிநாடு வாழ் இந்தியர்களிடையே பிரதமர் உரை நிகழ்த்துகிறார். 23-ம் தேதி ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டோனியோ குட்டரெஸ் தலைமையில் நடைபெறும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாநாட்டிலும் பங்கேற்கிறார். 24ம் தேதி பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்ளும் பிரதமர், 27-ம் தேதி காலை ஐ.நா. பொதுச்சபையில் உரையாற்றுகிறார்.

அமெரிக்‍க பயணத்திற்காக வரும் 21-ம் தேதி, டெல்லியிலிருந்து புறப்படும் திரு. மோடியின் விமானம், பாகிஸ்தான் வான் வழியே செல்ல பாகிஸ்தானிடம் இந்திய வெளியுறவுத்துறை அனுமதி கோரியது. இந்த நிலையில், பாகிஸ்தான் வான்வழியை பயன்படுத்த அனுமதி இல்லை பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00