இந்தியாவில் பல கட்சி நாடாளுமன்ற ஜனநாயக முறை தோல்வி அடைந்துவிட்டது - உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கருத்தால் புதிய சர்ச்சை

Sep 17 2019 5:25PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியாவில், பல கட்சி நாடாளுமன்ற ஜனநாயக முறை, தோல்வி அடைந்து விட்டதாக உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா தெரிவித்துள்ள கருத்து புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா, 70 ஆண்டு சுதந்திர இந்தியாவில், பல கட்சி நாடாளுமன்ற ஜனநாயக முறை தோல்வி அடைந்து விட்டதாக தெரிவித்தார். இதில், மக்களுக்கு சந்தேகம் இல்லை என்றும் கூறினார். அமித்ஷாவின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அமித்ஷாவின் பேச்சு அரசியல் சட்டத்துக்கு எதிரானது என்றும், சர்வாதிகார மனோபாவம் கொண்டது என்றும் மார்க்‍சிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

அமித்ஷாவின் கருத்து ஜனநாயகத்துக்கு விரோதமானது என்றும், ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தை செயல்படுத்த அமித்ஷா முயல்கிறார் என்றும் காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

கடந்த 14-ம் தேதி, தேசிய இந்தி தினத்தை ஒட்டி, அமித்ஷா வெளியிட்ட செய்தியில், இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்‍கது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00