இடஒதுக்கீடு அளிப்பதால் ஒதுக்கப்பட்ட சமூகங்கள் முன்னேற்றம் அடையும் என்பது தவறான கருத்து - நிதின் கட்கரி சர்ச்சைப் பேச்சு

Sep 17 2019 4:44PM
எழுத்தின் அளவு: அ + அ -

இடஒதுக்கீடு அளிப்பதால் தாழ்த்தப்பட்ட சமூகங்கள் முன்னேற்றம் அடையும் என்பது தவறான கருத்து என மத்திய அமைச்சர் திரு. நிதின் கட்கரி கூறியுள்ளார்.

மஹாராஷ்ட்ர மாநிலம் நாக்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திரு. நிதின் கட்கரி, இடஒதுக்கீடு என்பது தாழ்த்தப்பட்டவர்களுக்கும், சமூக, பொருளதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கும் மட்டுமே கொடுக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார். அதேநேரம், இடஒதுக்கீடு அளிப்பதால் மட்டுமே தாழ்த்தப்பட்ட சமூகங்கள் முன்னேற்றம் அடையும் என்பது தவறான கருத்து என மத்திய கூறினார்.

எப்போதெல்லாம் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்படுகிறதோ, அப்போதெல்லாம் கட்சித் தொண்டர்கள், சாதிய ரீதியில் இட ஒதுக்கீட்டை முன்வைத்து வாய்ப்பு கோருவது தவறு என கட்கரி தெரிவித்தார். அரசியலில் சாதித்தவர்கள் யாரும் சாதியை முன்னிறுத்தி சாதிக்கவில்லை என்று கூறிய கட்கரி, தேர்தல் வாய்ப்பை கட்சிப் பணியினாலேயே பெற வேண்டுமே தவிர சாதியைக் காட்டி பெறக்கூடாது எனக்‍ குறிப்பிட்டார்.

மஹாராஷ்ட்ராவின் மாலி சமூகத்தினர், பா.ஜ.க.வில் தங்களுக்கு சாதி அடிப்படையில் கட்சியில் இடஒதுக்கீடு செய்து தேர்தலில் சீட் தர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்த வருவது குறிப்பிடத்தக்‍கது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00