பிரதமர் மோடியின் 69வது பிறந்தநாள் கொண்டாட்டம் - காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, மேற்குவங்க முதல்வர் மம்தாபானர்ஜி உள்ளிட்டோர் வாழ்த்து

Sep 17 2019 1:08PM
எழுத்தின் அளவு: அ + அ -

பிரதமர் திரு. நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி, குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த், காங்கிரஸ் தலைவர் திருமதி. சோனியா காந்தி, மேற்குவங்க முதலமைச்சர் செல்வி மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பிரதமர் திரு. மோடிக்‍கு குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த் கூறியுள்ள வாழ்த்து செய்தியில், நல்ல ஆரேக்‍கியம் மற்றும் மகிழ்ச்சியுடன், நாட்டுக்‍கு நீண்டகாலம் சேவையாற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார். திரு. மோடி, நீண்ட நாட்கள் ஆரோக்கியத்துடன் வாழ கடவுள் ஆசிர்வதிக்கட்டும் என குடியரசுத் துணைத்தலைவர் திரு. வெங்கையா நாயுடு வாழ்த்தியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் திருமதி. சோனியா காந்தி, பிரதமர் நரேந்திர மோடி, ஆரோக்‍கியம், மகிழ்ச்சியுடன், நீண்ட ஆயுள் பெற வாழ்த்துவதாக தெரிவித்துள்ளார். மேற்குவங்க முதலமைச்சர் செல்வி மம்தா பானர்ஜியும் பிரதமர் மோடிக்‍கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா, பாதுகாப்பு அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங், ரயில்வே அமைச்சர் திரு. பியூஷ் கோயல், பா.ஜ.க. தலைவர்கள் உள்ளிட்டோர் பிரதமருக்‍கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் சில ஹேஷ்டேகுகளும் டிரெண்டிங் ஆகி வருகின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00