வட இந்தியர்கள் எத்தனை பேருக்கு வேலை வாங்கி கொடுத்தீர்கள்? - மத்திய அரசால் வேலையிழந்தோர் அதிகம் - பிரியங்கா காந்தி

Sep 17 2019 12:25PM
எழுத்தின் அளவு: அ + அ -

கடந்த 5 ஆண்டுகளில், வட இந்தியாவைச் சேர்ந்த எத்தனை பேருக்கு வேலை கொடுத்தீர்கள் என்று மத்திய அமைச்சருக்கு, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.

பா.ஜ.க.,வைச் சேர்ந்த மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் திரு. சந்தோஷ் குமார் கங்க்வார், வேலைவாய்ப்பு குறித்து ஒரு கருத்தை தெரிவித்திருந்தார். வேலைவாய்ப்புக்கு பஞ்சம் இல்லை என்றும் ஆனால், அதற்கு, வட இந்தியாவில் தகுதியான நபர்களுக்குத் தான் பஞ்சமாக உள்ளது என்றும் கூறினார். இக்‍கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், பா,ஜ.க- ஆட்சியின் கடந்த 5 ஆண்டுகளிலும், தற்போதைய 100 நாட்களிலும், வட இந்தியாவைச் சேர்ந்த எத்தனை பேருக்கு மத்திய அரசு வேலை கொடுத்துள்ளது என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

'திறன் இந்தியா' திட்டத்தின் கீழ் எத்தனை பேருக்கு வேலை அளிக்கப்பட்டது என்றும் அவர் வினவியுள்ளார். அதேவேளையில் எத்தனை பேர் வேலையிழந்தனர் என்ற புள்ளிவிவரம், மக்களிடம் இருப்பதை மறக்காதீர்கள் என்றும் திருமதி பிரியங்கா கூறியுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00