சீக்கிய யாத்ரீகர்களின் வசதிக்காக இந்தியா- பாகிஸ்தான் இடையே அமைக்கப்பட்டுள்ள கர்த்தார்பூர் பாதை - நவம்பர் 9ம் தேதி திறக்கப்படும் என அறிவிப்பு

Sep 17 2019 9:35AM
எழுத்தின் அளவு: அ + அ -

சீக்கிய யாத்ரீகர்களின் வசதிக்காக இந்தியா- பாகிஸ்தான் இடையே அமைக்கப்பட்டுள்ள கர்த்தார்பூர் பாதை நவம்பர் 9ம் தேதி திறக்கப்படுகிறது.

பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூரில் 500 ஆண்டுகள் பழமையான தர்பார் சாஹிப் குருத்வாரா உள்ளது. சீக்கிய மதத்தை நிறுவிய குரு நானக் தனது கடைசி 18 ஆண்டுகளை இங்குதான் கழித்தார். அங்கு சீக்கியர்கள் புனித பயணம் செல்வது வழக்கம். சீக்கிய யாத்ரீகர்களின் வசதிக்காக தர்பார் சாஜிப் குருத்வாராவில் இருந்து இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள தேரா பாபா நானக் ஆலயம் வரை பாதை அமைக்க இந்தியாவும், பாகிஸ்தானும் முடிவு செய்தன. அதன்படி, இரு நாடுகளும் அவரவர் பகுதியில் பாதை அமைத்துள்ளன. இந்நிலையில், இந்தியர்களின் வசதிக்காக அமைக்கப்பட்டு வரும் கர்தார்பூர் பாதை நவம்பர் 9ஆம் தேதி திறக்கப்படும் என இந்த பணிகளுக்கான பாகிஸ்தான் நாட்டு திட்ட இயக்குநர் அட்டிப் மஜித் தெரிவித்துள்ளார். கர்தார்பூர் பாதைக்கான பணிகள் 86 சதவீதம் நிறைவடைந்து விட்டதாகவும், இன்னும் சில நாட்களில் மீதமுள்ள பணியும் முடிந்து, நவம்பர் 9அம் தேதி முதல் இந்த பாதை திறந்து விடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00